தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ குழந்தைகளின் எடை அதிகரிக்க வாழைப்பழ உருண்டை

 குழந்தைகளின் எடை அதிகரிக்க வாழைப்பழ உருண்டை

 குழந்தைகளின் எடை அதிகரிக்க வாழைப்பழ உருண்டை


ADDED : டிச 13, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீங்கள் செய்யக்கூடிய தின்பண்டங்கள் வெறும் சுவைக்காக மட்டுமில்லாமல், ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், இந்த வாரம் வாழைப்பழங்களை கொண்டு, 'வாழைப்பழ உருண்டை' செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l செவ்வாழை -- 1 கப்

l நெய் -- 100 கிராம்

l ரவை -- ஒரு கப்

l பால் -- ஒரு கப்

l சர்க்கரை -- ஒரு கப்

l தேங்காய் துருவல் -- ஒரு கப்

l ஏலக்காய் துாள் -- 2 டீஸ்பூன்

l செய்முறை:

l ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும்.

l நெய் சிறிது சூடேறியதும், வெட்டி வைத்துள்ள 2 செவ்வாழை பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

l நெய், செவ்வாழை இரண்டும் நன்கு வதங்கி வரும் போது, ஒரு கப் ரவையை அதில் சேர்க்கவும்.

l ஐந்து நிமிடத்திற்கு வதக்கிய பின், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

l இதனுடன் ஒரு கப் பால் சேர்த்து, ரவையை நன்கு வேக வைக்கவும். பின், இதனுடன் ஒரு கப் சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து கொள்ளவும்.

l இந்த கலவையை மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வைத்திருங்கள்.

l கைகளால் தொடும் சூடு இருக்கும் போது சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள்.

l இதையடுத்து ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, உருண்டைகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் போதும். சுவையான வாழைப்பழ உருண்டை ரெடி

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us