தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ சமையல் மணக்க டிப்ஸ் 

 சமையல் மணக்க டிப்ஸ் 

 சமையல் மணக்க டிப்ஸ் 


ADDED : ஆக 22, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

l காலிபிளவரை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை தவிர்க்க முடியும்.

l முள்ளங்கி சாம்பார் செய்யும்போது, முள்ளங்கியை சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து, பின், சாம்பார் வைத்தால் முள்ளங்கி சுவை அதிகரித்து, சாம்பாரும் ருசியாக இருக்கும்.

l தோல் அலர்ஜி, தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான பிரச்னைகளை தடுக்க கிழங்கான் மீன் சாப்பிடலாம்.

l கருவேப்பிலையில் துவையல் செய்கிறீர்களா... சிறிதளவு இஞ்சி சேர்த்து பாருங்கள். சுவை துாக்கலாக இருக்கும்.

l பயத்தம் பருப்பில் சுண்டல் செய்யும் போது, பருப்பை லேசாக வறுத்து பின் சுண்டல் செய்தால், சுண்டல் உதிரியாகவும், மணமாகவும் இருக்கும்.

l வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, குக்கர் மூடியை திறந்ததும், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சாதம் உதிரியாக இருக்கும்.

l கத்திரிக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்யும் போது, சிறிதளவு கடலை மாவை துாவி, சில நிமிடங்கள் வதக்கி இறக்கினால், நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.

l மைசூர்பாகு மொறுமொறுப்பாக, பக்குவமாக வர அடுப்பில் இருந்து இறக்கும் முன், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

l கிழங்குகள் விரைவாக வேக, உப்பு கலந்த தண்ணீரில், 10 நிமிடங்கள் ஊறவைத்து வேக வைக்கலாம்.

l கிரேவி நீர்த்து போனால், வறுத்த வேர்க்கடலை பொடி சேர்த்து கொதிக்கவிட்டால் கெட்டியாகி விடும்.

l முட்டைகோஸ் சமைக்கும் போது, சிறிய துண்டு இஞ்சி சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும்.

l பச்சரிசியில் வெண்பொங்கல் செய்வதை விட, ஒரு முறை தினை அரிசியில் செய்து பாருங்கள். சுவை தனித்துவமாக இருக்கும்.

l செட்டிநாட்டு ஸ்டைலில் நண்டு குழம்பு செய்யும் போது, ஆட்டுகல்லில் அரைத்து மசாலாவை சேர்த்து பாருங்கள். நாவில் எச்சில் ஊற வைக்கும் அளவுக்கு சுவை இருக்கும்.

l கடலை பருப்புக்கு பதில், துவரம் பருப்பில் போளி செய்து பாருங்கள். மணமும், சுவையயும் துாக்கலாக இருக்கும்.

l கோவக்காய் வதக்கல் செய்கிறீர்களா... சிறிதளவு மிளகு துாளை சேர்த்து பாருங்கள் சுவையும், காரமும் அட்டகாசமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us