ADDED : ஆக 22, 2026 01:29 AM

- நமது நிருபர் -: இரண்டு மாம்பழங்களை வைத்து, நட்சத்திர ஹோட்டல் ஸ்டைலில், கிரீமி மாம்பழ ஜூஸ் வீட்டிலேயே செய்யலாம். இதை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. சுவையும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
l மாம்பழம் - 2
l பால் - 1/2 லிட்டர்
l கன்டன்ஸ்டு மில்க் - 100 மி.லி.,
l ஐஸ் கிரீம் - 250 கிராம்
செய்முறை
முதலில், இரண்டு மாம்பழத்தின் தோல்களை நீக்கிவிட்டு சிறிய அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதில், பாதியளவு மாம்பழத்தை மிக்சியில் போட்டு, பால் ஊற்றி கூழாக அரைத்து கொள்ளவும்.
பின், பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை போட்டு, அதில் மாம்பழ கூழை ஊற்றவும். இதில், கன்டன்ஸ்டு மில்க், ஐஸ் கிரீம், மீதமுள்ள மாம்பழ துண்டுகளை போட வேண்டும். இதை லேசாக கிளற வேண்டும். அவ்வளவு தான், சுவையான கிரீமி மாம்பழ ஜூஸ் தயார்.
இதைல ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி, அதன் மீது சிறிது ஐஸ் கிரீம் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!
