sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 பீர்க்கங்காய் கருவாடு தொக்கு

/

 பீர்க்கங்காய் கருவாடு தொக்கு

 பீர்க்கங்காய் கருவாடு தொக்கு

 பீர்க்கங்காய் கருவாடு தொக்கு


ADDED : பிப் 28, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: கருவாட்டு குழம்பு சாப்பிட்டால், உடல் பலவீனம் மற்றும் சளி, இருமல் குறைவதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதேபோல, பீர்க்கங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய்களை கட்டுப்படுத்த முடியும். கண் பார்வை, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பீர்க்கங்காய் - கருவாடு சேர்த்து சூப்பரான தொக்கு செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கால் கிலோ பீர்க்கங்காய் 150 கிராம் குச்சி கருவாடு ஐந்து வெங்காயம்

மூன்று தக்காளி ஒரு டீஸ்பூன் மிளகாய் துாள் அரை டீஸ்பூன் சீரக துாள்

இரண்டு பச்சை மிளகாய் கால் டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் உளுந்தம்பருப்பு

அரை டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு மூன்று பல் பூண்டு

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைத்து, அதில் கருவாடை போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து, நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பீர்க்கங்காயை தோல் சீவி தேவையான வ டிவில் வெட்டி வைக்கவும். வெங்காயம் , தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து கொள்ள வேண்டும். பின், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி விடவும்.

இன்னொரு கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்து உள்ள கருவாடு துண்டுகளை போட்டு, நன்றாக பொரித்து எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும், பொரித்த கருவாடில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின், நறுக்கி வைத்து உள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி விட்டு, மிளகாய், மஞ்சள், சீரக துாள்களை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். தேவையான தண்ணீர் ஊற்றி கடாயை மூடி வைத்து, பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆன் செய்தால், மணக்க, மணக்க பீர்க்கங்காய் கருவாடு தொக்கு ரெடி. சுடச்சுட சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம்.






      Dinamalar
      Follow us