ADDED : ஜூலை 05, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலை நேரம் வந்தால், சூடான காபி அல்லது டீயுடன், ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிடுவது பலரின் வழக்கம். தினமும் ஒரே விதமான சிற்றுண்டியை சாப்பிட்டு போர் அடிக்கிறதா? அப்படி என்றால் பிரட் வடை செய்து பாருங்கள்.
செய்முறை:
முதலில் பிரட்களை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ரவை, தயிர், சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, கொத்துமல்லி, சீரகம், சில்லி பிளேக்ஸ் போட்டு நன்றாக பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பிசைந்து வைத்து மாவில் சிறிது, சிறிதாக எடுத்து வடைகள் தட்டி, எண்ணெயில் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும்
- நமது நிருபர் -.