தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ ரோட்டுக்கடை ஸ்டைலில் வீட்டில் முட்டை தவா பலாவ் செய்யலாமா!

 ரோட்டுக்கடை ஸ்டைலில் வீட்டில் முட்டை தவா பலாவ் செய்யலாமா!

 ரோட்டுக்கடை ஸ்டைலில் வீட்டில் முட்டை தவா பலாவ் செய்யலாமா!


ADDED : ஜன 31, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

இரவு நேரத்தில், சாலைகள் ஓரம் தள்ளுவண்டியில் வைத்து தயார் செய்யப்படும், காரசாரமான, 'எக் ரைஸ், லீவர் ரைஸ், பலாவ் ரைஸ்' சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். ரோட்டு கடை ஸ்டைலில், வீட்டிலேயே முட்டை தவா பலாவ் செய்யலாமா….!

தேவையான பொருட்கள்

l ஆறு முட்டை

l வேக வைத்த சாதம்

250 கிராம்

l இரண்டு பெரிய வெங்காயம்

l இரண்டு தக்காளி

l இரண்டு பச்சை மிளகாய்

l இஞ்சி பூண்டு விழுது இரண்டு டீஸ்பூன்

l உப்பு ஒரு டீஸ்பூன்

l மிளகு துாள், கரம் மசாலா, தனியா, சீரக,

மஞ்சள் துாள்கள் ஒரு டீஸ்பூன்

l கொத்தமல்லி இலை

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை எவ்வளவு சிறியதாக நறுக்க முடியுமோ, அந்த அளவுக்கு சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து அகன்ற தவா வைக்கவும். அதில், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடிசாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு, தனியா, சீரகம், மஞ்சள் துாள்கள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும். தேவைப்பட்டால் சிவப்பு மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்து, விழுதையும் சேர்த்து கொள்ளலாம்.

மசாலா வாசனை போனதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளற வேண்டும். பின், ஆறு முட்டையை உடைத்து மஞ்சள் கருவை ஊற்றி, மசாலா கலவையுடன் சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பத்து நிமிடங்கள் வரை நன்கு கிளறவும்.

முட்டை மசாலா கலவை பதத்திற்கு வந்த பின், வேக வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும். பத்து நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லி இலையை பொடிசாக நறுக்கி துாவினால், முட்டை தவா பலாவ் ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us