ADDED : மே 23, 2026 04:00 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்கும் மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்து உள்ளன. மாம்பழத்தில் ரவா கேசரி செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இரண்டு பழுத்த மாம்பழம்
அரை கப் ரவை
சர்க்கரை முக்கால் கப்
தேவையான நெய்
பத்து முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை பத்து
ஏலக்காய் துாள் ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை
செய்முறை
மாம்பழங்களை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கவும். அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து, தீயை மிதமான சூட்டில் வைத்து ரவையை போட்டு, மூன்று முதல், ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். ரவை பொன்னிறமாக மாறியதும், ஒரு தட்டில் போட்டு கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் முந்திரி, திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, வறுத்த ரவை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
பின், மிக்ஸியில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து மூன்று நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
மாம்பழ விழுதும், ரவையும் நன்கு வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து விடுங்கள். ஏலக்காய் துாளையும் சேர்த்து விடவும். நெய் சேர்த்து, 15 நிமிடங்கள் கெட்டியாகும் வரை வேக விடுங்கள். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, நெய், குங்குமப்பூ சேர்த்து இறக்கினால் சூடான, சுவையான மாம்பழ ரவா கேசரி தயார். இதை சாப்பிடும் போது, நாக்கு நடனமாடும். செய்து கொடுத்தவர்களுக்கு பாராட்டும் கிடைக்கும்!
