தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/இனிப்பு பிரியர்களுக்கு கேரட் ரசமலாய்

இனிப்பு பிரியர்களுக்கு கேரட் ரசமலாய்

இனிப்பு பிரியர்களுக்கு கேரட் ரசமலாய்


ADDED : பிப் 07, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலருக்கு உணவுக்கு பின்னரோ அல்லது முன்னரோ, இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும். தினமும் ஒரே விதமான இனிப்பு தின்று போரடிக்கிறதா. அப்படி என்றால், கேரட் ரசமலாய் செய்து சாப்பிடுங்கள். எப்படி செய்வது என, பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்

கேரட் - 2

பால் - 1 கப்

நெய் - கால் கப்

சர்க்கரை - 2 கப்

சிறிய ரவை - 2 கப்

பாதாம் - 10

பிஸ்தா - 10

ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிதளவு

கஸ்டர்டு பவுடர் - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் கேரட்களை நறுக்கி, மிக்ஸியில் போடவும். அதில் அரை கப் பால், சர்க்கரை, ஏலக்காய் துாள் போட்டு, மிருதுவாக அரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றவும். சூடானது ம் ரவையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் அரைத்த கேரட் விழுது, அரை கப் பால் சேர்த்து, நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றி, கெட்டியாகும் வரை கை விடாமல் கலக்கவும்.

அடுப்பில் இருந்து கீழே இறக்கி, ஆற விடவும். அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். கஸ்டர்டு பவுடரை போட்டு, கை விடாமல் அடிபிடிக் காமல் கலக்கவும்.

பின் இதில் சர்க்கரை, பொடித்த பாதாம், பிஸ்தா, ஏலக்காய் துாள், குங்குமப்பூ சேர்த்து கலக்கவும். அத்துடன், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கேரட் விழுதை சிறு, சிறு உருண்டைகளாக்கி, பால், கஸ்டர்டு கலவையில் போடவும். ஒரு மணி நேரம் பாலில் ஊறினால், சுவையான கேரட் ரசமலாய் தயார். பார்ட்டிகள், விருந்துகளின் போது இதனை தயாரிக்கலாம். பாராட்டு நிச்சயம்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us