ADDED : மார் 21, 2026 05:37 AM

- நமது நிருபர் -
அசைவ உணவு பிரியர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால், சைனீஸ் ரெசிபிகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதில், அதிக டிமாண்ட் உள்ள டிராகன் சிக்கனை, ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம்.
செய்முறை
பவுலில் சிக்கனை போட்டு, மிளகு துாள், உப்பு, சோயா சாஸ் சேர்த்து, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, சோள மாவை கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும். தட்டு வைத்து பவுலை அரை மணி நேரம் மூடி விடவும். அரை மணி நேரத்திற்கு பின், அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சிக்கன் கலவையை அதில் போட்டு, சிக்கனை நன்கு பொரித்து எடுக்கவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய முந்திரி பருப்பு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சிதறல் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் நறுக்கிய அரை வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து கிளறி, சோயா, சில்லி சாஸ், தக்காளி கெச் அப், சர்க்கரை சேர்க்க வேண்டும். கலவை கிரேவி பதத்தில் வர, அரை கப் தண்ணீர் சேர்க்கலாம். தண்ணீரில் கரைத்த சோள மாவையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறவும். கிரேவி பதம் வந்ததும், பொரித்த சிக்கன் துண்டுகளை நன்கு மிக்ஸ் செய்து, 5 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை ஆன் செய்து விடவும். அவ்வளவு தான் காரசாரமான டிராகன் சிக்கன் ரெடி. சப்பாத்தி, பிரியாணிக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

