தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ பத்து நிமிடங்களில் வீட்டிலேயே செய்யலாம்…! நாவில் நடனமாடும் சாக்லேட் பிெரஞ்ச் டோஸ்ட்

 பத்து நிமிடங்களில் வீட்டிலேயே செய்யலாம்…! நாவில் நடனமாடும் சாக்லேட் பிெரஞ்ச் டோஸ்ட்

 பத்து நிமிடங்களில் வீட்டிலேயே செய்யலாம்…! நாவில் நடனமாடும் சாக்லேட் பிெரஞ்ச் டோஸ்ட்


ADDED : ஏப் 11, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். இரவில் துாக்கத்தில் இருந்து எழுப்பி கொடுத்தால் தான், குழந்தைகள் சாக்லெட்டை விரும்பி சாப்பிடுவர். சாக்லெட்டை பயன்படுத்தி, வீட்டிலேயே பத்து நிமிடங்களில், சாக்லெட் பிரெஞ்ச் டோஸ்ட் செய்யலாமா...!

தேவையான பொருட்கள்

* ஒரு பாக்கெட் பிரட்

* மூன்று முட்டை

* சாக்லேட் மில்க் அரை கப்

* நாட்டு சர்க்கரை 2 டீஸ்பூன்

* வெண்ணிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்

* கோகோ பவுடர் அரை டீஸ்பூன்

* வெண்ணெய் தேவையான அளவு

* அரை கப் பிரஷ் கிரீம்

* டார்க் சாக்லெட் 100 கிராம்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, சாக்லேட் மில்க், நாட்டு சர்க்கரை போட்டு கலக்கவும். நாட்டு சர்க்கரை இல்லாவிட்டால், வெள்ளை நிற சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளலாம். வெண்ணிலா எசன்ஸ், கோகோ பவுடர் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். முட்டை கலவை கிடைத்து விடும்.

பெரிய தட்டை எடுத்து, பிரட்டை சற்று கடினமாக நறுக்கி அந்த தட்டில் வைத்து, அதன் மீது முட்டை கலவை ஊற்ற வேண்டும். பிரட்டை இரு பக்கமும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின், அடுப்பை ஆன் செய்து மிதமான சூட்டில் வைத்து, வாணலி வைத்து முட்டை கலவையுடன் ஊறிய பிரட்டை எடுத்து வைக்கவும். பிரட்டை சுற்றி வெண்ணெய் தடவ வேண்டும். இருபக்கமும் பிரட்டை நன்கு டோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் பிரஸ் கிரீமை ஊற்றி, அடுப்பை மிதமாக சூட்டில் வைக்க வேண்டும்.

பிரஸ் கிரீமுடன், டார்க் சாக்லெட்டை போட்டு நன்கு கலக்க வேண்டும். சாக்லெட் உருகி கூழ் போன்று ஆனதும், அடுப்பை ஆப் செய்து விடவும். பாத்திரத்தின் சூடு ஆறியதும், டோஸ்ட் செய்து வைத்து உள்ள பிரட் மீது, கூழ் போன்று உருகி இருக்கும் சாக்லேட் டை ஊற்றினால் போதும். அவ்வளவு தான் நாவை நடனமாட வைக்கும் சாக்லேட் பிெரஞ்ச் டோஸ்ட் ரெடி. சாக்லேட் பிரியர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us