ஒரு துண்டு இஞ்சி சேர்த்து முட்டைக்கோசை சமைத்தால் அதன் மனம் மாறாமல் இருக்கும். மீன் வறுக்கும் மசாலாவில், சிறிது கடலை மாவும் சேர்த்தால் மீனின் சுவை கூடும். வெண்ணெய்யை உருக்கும்போது சிறிது கறிவேப்பிலை சேர்த்தால் நெய் நல்ல வாசமாக இருக்கும்.
புளியை பயன்படுத்தி குழம்பு வைக்கும்போது, எண்ணெய்யில் வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு பின் தக்காளியை சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும். குருமா வைக்கும்போது காரம் கூடினால், சிறிதளவு வெண்ணெய் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால் குருமாவில் காரம் குறைந்துவிடும். எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது இஞ்சி சாறு சேர்த்தால் சுவை, மனம் கூடும்.
இறைச்சி வேகவைக்கும்போது, கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் நன்றாக வெந்துவிடும்.
பூரிக்கு மாவு பிசையும்போது, 2 கப் கோதுமை மாவில் கால் கிண்ணம் பெரிய ரவாவை சேர்த்தால் பூரி உப்பலாக வரும்

