sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

நொறுக்குகள்

/

நொறுக்குகள்

நொறுக்குகள்

நொறுக்குகள்


ADDED : அக் 25, 2025 05:10 AM

Google News

ADDED : அக் 25, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

� � தேங்காய் பொடி செய்யும்போது சிறிது புளியையும் எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கொண்டால் பல வாரங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. � � குளிர்சாதன பெட்டிக்குள் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்.

� � ஆப்பம் செய்ய மாவு அரைக்கும்போது அதில் துருவிய தேங்காயை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும். � � எலுமிச்சை சாதத்தில் வறுத்த நிலக்கடலையை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். � � கிரேவி வகைகளை செய்யும்போது அதில் கொத்தமல்லி இலைகளை துாவினால் மணமும், சுவையும் கூடும்.

� � பருப்பு, பயிர் வகைகளை வேக வைக்கும்போது குக்கரை பயன்படுத்துவது சிறப்பு. அப்போது, அதிலுள்ள சத்துகள் அனைத்தும் கிடைக்கும். � � ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும். � � பீன்சை வைத்து கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.

� � பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும். � � துவரம் பருப்பு வேக வைக்கும்போது, 1 டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெடாது

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us