sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

நொறுக்குகள்

/

நொறுக்குகள்

நொறுக்குகள்

நொறுக்குகள்


ADDED : டிச 27, 2025 06:23 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: l சிக்கன் குழம்பு செய்யும் போது, இறுதியாக தேங்காய், சோம்பு அரைத்து குழம்பில் ஊற்றினால் குழம்பு சுவையாகவும், கெட்டியாகவும் இருக்கும்.

l துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

l எலுமிச்சை சாதம் செய்ய எலுமிச்சை சாறு பிழியும் போது, அதன் விதைகளை நீக்கிவிட்டு சாதம் செய்யலாம். இதன்மூலம், சாதம் உண்ணும் போது விதை வாயில் தட்டுப்படாது.

l வெண்டைக்காய் நறுக்கும் போது, தனித்தனியாக நறுக்காமல் நான்கு காய்களை சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் நறுக்கினால் நேரம் மிச்சமாகும்.

l கறிவேப்பிலை அதிகமாக வாங்கி விட்டால், அதை வைத்து பொடி அரைத்து இட்லிக்கு தொட்டு சாப்பிடலாம்.

l பஜ்ஜிக்கு மாவு கலக்கும் போது, மைதா மாவை சேர்த்தால் பஜ்ஜி மொறு மொறுப்பாக இருக்கும்.

l பிரியாணி செய்யும் போது, சாதம் குழையாமல் இருக்க, அரிசி போடும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

l வெஜ் நுாடுல்ஸ் செய்யும் போது, கட்டாயம் குடை மிளகாய், கோஸ் சேர்க்க வேண்டும். அப்போது தான் சுவை நன்றாக இருக்கும்.

l தோசை மாவில் இரண்டு துண்டு பூசணிக்காய் அரைத்து சேர்த்து தோசை சுட்டால் தோசை சுவையாக இருக்கும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us