தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொ று க் கு கள்

 நொ று க் கு கள்

 நொ று க் கு கள்


ADDED : மார் 28, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

 ஆம்லெட் செய்யும் போது, எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

 காய்கறிகளை அதிக நேரம் வேகவைக்காமல், பாதியளவு வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

 தக்காளி தொக்கு செய்யும் போது சிறிதளவு சிக்கன் மசாலா சேர்த்தால் சுவை 'உச்' கொட்டும்.

 இட்லி உப்புமா செய்யும் போது, காய்கறிகளை பொடியாக நறுக்கி, வதக்கி சேர்த்துக்கொண்டால், சுவையாக இருக்கும்.

 வெண்பொங்கல் செய்யும் போது டால்டா சேர்த்தால் சுவை அருமை.

 சட்னி தயாரிக்கும் போது, கடைசியாக கொஞ்சம் நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

 கொத்துமல்லி துவையல் அரைக்கும் போது சிறிது தயிர் சேர்த்தால் சுவை சூப்பர்.

 துவரம் பருப்பு வேகவைக்கும் போது, சிறிதளவு வெந்தயம் சேர்த்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

 வேர்க்கடலை குழம்பு செய்யும் போது, வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் கடலை சீக்கிரம் வெந்துவிடும்.

 இட்லி பொடியுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் அரைத்தால், வித்தியாசமான சுவையுடைய வெங்காய சட்னி தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us