தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : செப் 26, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:  ரசம் தாளிக்கும்போது பெருங்காயம், கறிவேப்பிலையை புளித்தண்ணீரில் சேர்க்காமல், தாளிக்கும் எண்ணெய்யில் சேர்த்தால் ரசம் நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.

 பூண்டை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து உரித்தால், மேல் தோலை எளிதாக நீக்கலாம்.

 தேங்காய் துவையல் அரைக்கும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால், துவையல் நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.

 ஆப்ப மாவுடன் சீரகம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் அனைத்தையும் அரைத்து சேர்த்து சுட்டால் மசாலா ஆப்பம் தயாராகிவிடும்.

 எலுமிச்சை ஊறுகாய் விழுதில், கேரட் துண்டுகளை போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 வெண்பொங்கல் வெந்ததும், ஒரு கரண்டி காய்ச்சிய பாலை சேர்த்து கிளறி மூடி வைத்தால், பொங்கல் மேலும் சுவையாக இருக்கும்.

 வெண்டைக்காய் பொரியலில் வறுத்த வேர்க்கடலை பொடி சேர்த்து வதக்கினால், பொரியல் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

 வெஜிடபிள் ரைஸ், நெய்சாதம் போன்றவற்றை செய்யும்போது, தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவை சிறப்பாக இருக்கும்.

 உளுந்து வடை மாவை நைசாக அரைத்து, வேக வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்து வடை செய்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us