ADDED : செப் 26, 2026 03:26 AM

- நமது நிருபர் -
புரோக்கோலியில், 'விட்டமின் சி' சத்து, ஏராளமாக உள்ளது. இது, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடல் எடையை குறைக்க விரும்பும் பெரியவர்களும், இதை சாப்பிடலாம். புருக்கோலி தோசையை எளிதாக செய்யலாம்.
தேவையான பொருட்கள் புரோக்கோலி துண்டுகள் - சிறிதளவு
பாம்பே ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - அரை கப்
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை முதலில் புரோக்கோலியை, உப்பு நீரில் கழுவி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். இந்த துண்டுகளை சில நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதில் தயிர் தேவையான அளவில் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் மூடி வைக்கவும். அதன்பின் இந்த மாவில், புரோக்கோலி, சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் தடவி சூடானதும், கரைத்து வைத்துள்ள மாவில் தோசை வார்க்க வேண்டும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான புரோக் கோலி தோசை தயார். தேங்காய் சட்னி அல்லது தக்காளி தொக்கு தொட்டு சாப்பிட்டால், சுவையாக இருக்கும். கா லை சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்!
