ADDED : செப் 26, 2026 03:25 AM

- நமது நிருபர் -: பொதுவாக காலை சிற்றுண்டிக்கு, பல வீடுகளில் இட்லி, சட்னி செய்வது வழக்கம். தினமும் ஒரே மாதிரியான இட்லியை கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பாக இருக்கும். இவர்களை குஷிப்படுத்த, சாக்லேட் இட்லி செய்து தாருங்கள்.
தேவையான பொருட்கள் இட்லி மாவு - 3 கப்
சர்க்கரை - 3 கப்
ஒயிட் சாக்லேட்
துண்டுகள் - அரை கப்
மில்க் சாக்லேட்
துண்டுகள் - அரை கப்
கோகோ பவுடர் - 3 ஸ்பூன்
சாக்லேட் சிரப் - 4 ஸ்பூன்
ஈனோ - 2 சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை முதலில் இட்லி மாவில், கோகோ பவுடர், சர்க்கரை, சிறிது உப்பு போட்டு, நன்றாக கலக்கவும். இந்த கலவையில் ஒயிட் சாக்லேட் துண்டுகள், மில்க் சாக்லேட் துண்டுகளை போட்டு கலக்கவும். அதன் பின் ஈனோ சேர்க்கவும். இட்லி தட்டுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள சாக்லேட் மாவை ஊற்றவும். குக்கரை மூடி, 15 நிமிடம் வேக வைக்கவும். அதன் பின் குக்கரை திறந்து, இட்லிகள் மீது சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்தால், சாக்லேட் இட்லி தயார், கலர்புல்லாக தெரிவதால், குழந்தைகள் குஷியோடு சாப்பிடுவர். வார இறுதி நாட்களில் செய்ய ஏற்ற உணவு இது.
