தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆப்பிள் பழத்திலும் அருமையான அல்வா

ஆப்பிள் பழத்திலும் அருமையான அல்வா

ஆப்பிள் பழத்திலும் அருமையான அல்வா


ADDED : ஆக 30, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அல்வா என்றால், அனைவரின் வாயில் எச்சில் ஊறும். கேரட், பூசணிக்காய், சுரைக்காய் என, பல்வேறு காய்கறிகளில் அல்வா செய்யலாம். ஆப்பிள் பழத்திலும் அல்வா செய்யலாம். குட்டீஸ்களின் பிறந்த நாளுக்கு ஏற்ற பலகாரமாக இது நிச்சயம் இருக்கும்.

செய்முறை முதலில் ஆப்பிள் பழங்களின் தோலை நீக்கி துருவிக் கொள்ளவும். இதை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் ஊற்றாவிட்டால் பழம் கறுத்துவிடும்.

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றவும். காய்ந்த பின் ஏற்கனவே துருவி வைத்துள்ள ஆப்பிள் பழங்களை, தண்ணீரை பிழிந்து வாணலியில் போட்டு வதக்கவும். சிறிது வெந்த பின் சர்க்கரை, புட் கலர் சேர்த்து, கை விடாமல் கிளற வேண்டும்.

வாணலியில் ஒட்டாமல், அல்வா திரண்டு வரும்போது ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரி பருப்பை துாவினால், ஆப்பிள் அல்வா தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பிறந்த நாள் பார்ட்டிக்கு செய்து அசத்துங்கள்

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us