sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 வாழைக்காய் தோலில் அருமையான சட்னி

/

 வாழைக்காய் தோலில் அருமையான சட்னி

 வாழைக்காய் தோலில் அருமையான சட்னி

 வாழைக்காய் தோலில் அருமையான சட்னி


ADDED : பிப் 14, 2026 04:49 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமதுநிருபர் -

வாழைப்பழம் சுவையானது. அதிகமான சத்துக்கள் நிறைந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாழைப்பழம் மட்டுமின்றி, வாழைக்காய் தோலிலும், ஊட்டச்சத்துகள் உள்ளன. இதில், சுவையான சட்னி செய்யலாம். இதை எப்படி செய்வது என, பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l வாழைக்காய் தோல் - 1 கப்

l சீரகம் - 1 ஸ்பூன்

l உலர்ந்த மிளகாய் - 3

l மஞ்சள் துாள் - 1 ஸ்பூன்

l புளி ரசம் -1 ஸ்பூன்

l எண்ணெய் - அரை ஸ்பூன்

l சர்க்கரை - 1 ஸ்பூன்

l உப்பு - தேவையான அளவு

l தண்ணீர் - 1 கப்

செய்முறை

வாழைக்காய் தோலை, மஞ்சள் நீரில் ஐந்து நிமிடம் நனைத்து வைக்கவும். அதன்பின் குக்கரில் போட்டு, ஒரு கப் நீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றவும். காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

இந்த கலவையில் வாழைக்காய் தோலை சேர்த்து, நான்கு நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து விட்டு, வாழைக்காய் கலவையை ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் வதக்கிய வாழைக்காய் தோல், புளிச்சாறு, சர்க்கரை, உப்பு சேர்த்து அரைக்கவும். இது சோற்றுக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும்.

வாழைக்காய் தோலில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. வாழைக்காய் வறுவல், பஜ்ஜி செய்யும் போது, தோலை வீசியெறியாதீர்கள். சுவையான சட்னி செய்யுங்கள். சிறியவர் முதல், பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.






      Dinamalar
      Follow us