
அவசரத்துக்கு வீட்டுல ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்றால் இட்லி, தோசை செய்து சாப்பிடலாம். இதனால் எல்லாருடைய வீடுகளிலும் எப்போதுமே தோசைக்கு மாவு அரைத்து வைத்து இருப்பர். ஒருவேளை மாவு காலியாகி விட்டால், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தோன்றும். தக்காளி சாதம், பருப்பு சாதம், சப்பாத்தி, பூரி என்று ஏதாவது ஒன்று தயார் செய்யலாமா என யோசிப்பர்.
சில வீடுகளில் குழந்தைகள் இட்லி, தோசை தான் வேண்டும் என்றும் அடம்பிடிப்பர். இந்த மாதிரி நேரத்துல நமக்கு தேவைப்படுவது உருளைக்கிழங்கும், ரவையும் தான். அது இரண்டும் இருந்தாலே தோசை ரெடி பண்ணி விடலாம். உருளைக்கிழங்கு - ரவை காம்பினேஷனில் எப்படி தோசை தயார் செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து பச்சை மிளகாய், உப்பு போட்டு தேவைப்படும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவை, மிக்ஸியில் அரைத்த கலவை சேர்த்து நன்கு கலக்கவும்.
சில்லி பிளேக்ஸ், அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி, 10 நிமிடம் ஊற வைத்த பின், தோசை கல்லில் மாவு ஊற்றினால் சுவையான தோசை தயார். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் ஊற்றி சாப்பிடலாம்.
வழக்கமான தோசையை விட ருசி வேறு மாதிரி இருக்கும் என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
- நமது நிருபர் -

