ADDED : ஜன 10, 2026 06:43 AM

அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால், மிகவும் விருப்பம். முட்டையில் பல விதமான புரதச் சத்துகள் உள்ளன. முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். போதும் என்ற எண்ணமே தோன்றாது. காலை அல்லது மாலை டிபனுக்கு குட்டீஸ்களுக்கு செய்து தரலாம்.
தேவையான பொருட்கள்
• முட்டை - 5 முதல் ஆறு
• வெங்காயம் - 2
• தக்காளி - 1
• பச்சை மிளகாய் - 3
• கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
• மிளகாய் துாள் - 1 ஸ்பூன்
• மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
• மிளகு துாள் - அரை ஸ்பூன்
• கரம் மசாலா - அரை ஸ்பூன்
• உப்பு - தேவையான அளவு
• எண்ணெய் - வேக வைக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் அகலமான பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஸ்பூனால் நன்றாக கிளறுங்கள். இதில், சிறிதாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் துாள், கரம் மசாலா, தக்காளி, மிளகு துாள் சேர்க்கவும். சுவைக்கு தேவையான உப்பு சேர்க்கவும். இதை பணியார மாவு பதத்தில் நன்றாக கலந்து கொள்ளவும். இதை ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
அதன்பின் கலவையை மீண்டும் கலக்கவும். பணியார கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, முட்டை கலவையை ஊற்றவும். மிதமான தீயில் நான்கு நிமிடம் வேக வைக்கவும். அதன்பின் மற்றொரு பக்கம் திருப்பி போடவும். பொன்னிறமாக வெந்தால், சுவையான முட்டை பணியாரம் தயார். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். எதையும் தொட்டுக்கொள்ளாமல், அப்படியே சாப்பிடலாம்.
வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வரும் போது, செய்து கொடுக்கலாம். இதை தயாரிக்க 10 முதல் 15 நிமிடங்கள் போதும்
- நமது நிருபர் - .

