மதுரையில் மலைக்க வைக்கும் மஞ்சிஸ்; இதம் தரும் இத்தாலியன் சைனீஸ் உணவுகள்
மதுரையில் மலைக்க வைக்கும் மஞ்சிஸ்; இதம் தரும் இத்தாலியன் சைனீஸ் உணவுகள்
UPDATED : மார் 23, 2025 07:53 AM
ADDED : மார் 23, 2025 03:45 AM

இத்தாலியன், சைனீஸ் உணவு பிரியர்களின் தேர்ந்தெடுத்த சுவைக்கு தீனி போட புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது மதுரை டி.வி.எஸ். நகர் சத்யசாய் நகரில் 'மஞ்சிஸ் பைன் டைனிங்' ரெஸ்டாரண்ட். நுழைந்தவுடன் டைனிங் டேபிள் செல்லாமல் காம்பவுண்ட் வளாகத்தில் காற்றாட நாற்காலியில் அமர்ந்து உணவு ஆர்டர் வரும் வரை சமைக்கும் விதத்தை நிதானமாக ரசிக்கலாம். சமைக்கும் இடம் தனியாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் அமைந்துள்ளதே இவர்களின் சுவைக்கும் தரத்திற்கும் சான்று.
மதியம் 12:30 முதல் இரவு 10:30 மணி வரை எந்த வகை உணவென்றாலும் ஆர்டர் செய்தால் சுடச்சுட தயார் செய்து தருகிறோம் என்கிறார் 'மஞ்சிஸ் பைன் டைனிங்' உரிமையாளர் ப்ரீதி ராம்குமார்.
அவர் கூறியதாவது: சூப், ஸ்டார்ட்டரில் துவங்கி பீட்சா, பாஸ்தா, பர்கர், சாலட், சீஸ் சாலட், பிரெட், கேக், மில்க் ேஷக், மோமோஸ், ராவியோலி என 109 வகையான உணவுகளை தயாரிக்கிறோம்.
பீட்சா தயாரிக்க ரெடிமேட் ரொட்டி வாங்குவதில்லை. தினமும் மாவு பிசைந்து சுடச்சுட உருவாக்குகிறோம். மாவு, காய்கறி, சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களையும் பிரெஷ் ஆக வாங்கி சமைக்கிறோம். பிரீசர் உணவு சேர்ப்பதில்லை. நிபுணர்கள் சமைப்பதை ரசித்த படி சாப்பிடலாம். பாஸ்தாவுக்கான சாஸ் தினமும் தயாரிக்கிறோம்.
சமீபத்தில் பெண்கள் தினத்தன்று இத்தாலி உணவான 'பிங்க் ராவியோலி' சமைத்து பெண்களை பெருமைப்படுத்தினோம். உணவுக்காக தனி நிறங்களை, சைனீஸ் உணவுகளில் அஜினோமோட்டாவை பயன்படுத்துவதில்லை.
இத்தாலியன் உணவுகளைப் பொறுத்து விறகடுப்பை பயன்படுத்தி பீட்சா, பாஸ்தா, கார்லிக் பிரெட், புருெஸட்டா, பர்கர், சாண்ட்விச் தயாரிக்கிறோம். சுவை வித்தியாசமாக இருக்கும். இண்டோர், அவுட்டோர் டைனிங் உள்ளது. வளைகாப்பு, பர்த்டே பார்ட்டிகளுக்கு 45 பேர், தனியார் நிறுவன மீட்டிங் எனில் 20 பேர் அமரும் வகையில் இடவசதி செய்துள்ளோம். வீக் எண்ட் பார்ட்டி, மீட்டிங் என்றால் முன்கூட்டியே ஆர்டரும் செய்யலாம். வாடிக்கையாளர் விரும்பும் வகையில் பர்த்டே கேக் தயாரித்து தருகிறோம். ஒரே பீட்சாவில் பாதி இனிப்பு, பாதி காரம் என்று தயாரித்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துகிறோம். பார்ட்டி என்றால் 'பபே' முறையில் உணவு வழங்குகிறோம் என்றார்.
இத்தாலியன், சைனீஸ் உணவு பிரியர்கள் பிரத்யேக சுவைக்கு ஒருமுறை விசிட் செய்யலாம்.
உணவை ருசிக்க 93638 67454