sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 சுவையான பட்டாணி இட்லி

/

 சுவையான பட்டாணி இட்லி

 சுவையான பட்டாணி இட்லி

 சுவையான பட்டாணி இட்லி


ADDED : ஜன 31, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பெரும்பாலான வீடுகளில், தினமும் காலை சிற்றுண்டிக்கு இட்லி செய்வது வழக்கம். இட்லிகளில் பல ரகங்கள் உள்ளன. இதற்காக புது வகையான இட்லி சாப்பிட, ஹோட்டலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே பல விதமான இட்லிகள் செய்யலாம். பட்டாணி இட்லியும் மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

l ரவை - 2 கப்

l பட்டாணி - 1 கப்

l வெந்தய கீரை - ஒரு சிறிய கட்டு

l தயிர் - அரை கப்

l ஓட்ஸ் - 1 ஸ்பூன்

l பாகற்காய் தோல் - 2 ஸ்பூன்

l பச்சை மிளகாய் - 2

l உப்பு - தேவையான

அளவு

l இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை

முதலில் பட்டாணியை கழுவி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அதை மிக்சியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். கலவையில் பொடியாக நறுக்கிய பாகற்காய் தோல், வெந்தய கீரை, உப்பு, ஓட்ஸ், இஞ்சி, விழுதாக அரைத்த பச்சை மிளகாய் போட்டு. இட்லி மாவு பதத்துக்கு அரைக்க வேண்டும்.

மாவில் தயிர் சேர்த்து, 10 முதல் 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். அதன்பின் இட்லி தட்டில் இட்லியை ஊற்றி வேக வைக்கவும். சூடாக பரிமாறவும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும் அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாரிலும் தொட்டு சாப்பிடலாம். ஓட்ஸ், பாகற்காய் தோல், வெந்தய கீரை சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. விருப்பம் உள்ளவர்கள் சிறிய துண்டு கேரட்டை பொடியாக நறுக்கி, இட்லி மாவில் சேர்த்து கொள்ளலாம். காலை டிபனுக்கு ஏற்றது.






      Dinamalar
      Follow us