ADDED : ஜன 10, 2026 06:41 AM

ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் அதிகளவில் வளர்வது தான் பிரண்டை. இதில், பல வகைகள் உள்ளன. 50 வயதை கடந்தாலே மூட்டு, கால்கள் வலிப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு அத்தகைய தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக, இந்த வாரம், 'பிரண்டை வற்றல்' செய்யலாம் .
தேவையான பொருட்கள்
• பிரண்டை - 2 கைப்பிடி
• உப்பு - தேவையான அளவு
• மோர் - தேவையான அளவு
செய்முறை
• பிரண்டையை பறித்து, அதில் உள்ள தண்டு பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
• பின், பிரண்டையை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்யவும். பின், தரையில் துணியை விரித்து, அதில் பிரண்டையை பரப்பி, நிழலில் காய வைக்கவும்.
• இதையடுத்து உப்பு மற்றும் மோர் சேர்த்து ஒரு வாரம் நிழலில் காய வைத்து கொள்ளவும்.
• நன்றாக காய்ந்த பின், ஒரு டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப்படும் போது எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். குழந்தைகளுக்குப் பிடித்தவாறு செய்து சாப்பிடும் போது, இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்
- நமது நிருபர் - .

