தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ பச்சை பயறு சப்பாத்தி

 பச்சை பயறு சப்பாத்தி

 பச்சை பயறு சப்பாத்தி


ADDED : ஜன 10, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு மதியம் கொடுத்து அனுப்பும் சாதம் வகைகளை, சாப்பிடாமல் அப்படியே மாலை வீட்டுக்கு கொண்டு வந்து விடுவர். அவர்களுக்கு பிடித்தபடி சமையல் சமைத்து கொடுக்க, பச்சை பயிறு சப்பாத்தி சிறந்தது.

தேவையான பொருட்கள்

• பச்சைப்பயிறு - 2 கப்

• மிளகாய் - 2

• சீரகம் - 2 டீஸ்பூன்

• கோதுமை மாவு - 2 கப்

• உப்பு - சுவைக்கு ஏற்ப

• தண்ணீர் - போதுமான அளவு

செய்முறை

• முதலில் பச்சைப் பயறை, தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

• இதையடுத்து ஊற வைத்த பச்சைப்பயறு, இரண்டு மிளகாய் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். நைஸாக அரைத்த பின் ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும்.

• பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சைப் பயறு கலவையை ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

• சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும். இறுதியாக தோசைக்கல்லை சூடேற்றி தேய்த்து வைத்த மாவை சுட்டெடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி தயார்

- நமது நிருபர் -: .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us