தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ மணம் வீசும் மசாலா முட்டை பணியாரம்

மணம் வீசும் மசாலா முட்டை பணியாரம்

மணம் வீசும் மசாலா முட்டை பணியாரம்


ADDED : ஜூலை 26, 2025 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரப்பணியாரம், குழிப்பணியாரம், கருப்பட்டி பணியாரம், இனிப்பு பணியாரம் என, பணியாரத்தில் பல வகைகளை சாப்பிட்டு இருப்பீர்கள். இதுவரை, பலரும் சாப்பிடாத, அறியாத புது விதமான மசாலா முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை வித்தியாசமாக இருக்கும். எண்ண முடியாத அளவுக்கு பணியாரத்தை சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

தேவையான பொருட்கள் முட்டை -- 4

தேங்காய் துண்டுகள் - 1/4 கப்

பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பூண்டு - 2 பல்

இஞ்சி - 1 துண்டு

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறதளவு

செய்முறை ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளையும் உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். மிக்சியில் தேங்காய் துண்டுகள், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த கலவையை, முட்டையுடன் சேர்த்து கொத்தமல்லி இலைகள் துாவி நன்றாக கலக்கவும்.

பின்னர், பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள முட்டையை பணியார கல்லில் ஊற்றி, இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் மசாலா முட்டை பணியாரம் தயார்.

இந்த பணியாரத்தை மாலை வேளையில் தக்காளி சட்னியுடன் வைத்து சாப்பிட்டால், சுவை தாறு மாறாக இருக்கும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us