ADDED : மார் 29, 2025 02:52 AM

நாவிற்கு புதிய சுவையை விரும்புவோர், சட்டென்று 'பூண்டு பட்டர் பாஸ்தா' செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 2 கப்
வெண்ணெய் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
இரண்டு கப் பாஸ்தாவை, தண்ணீர் ஊற்றி, வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்
ஒரு வாணலியை சூடேற்றி, வெண்ணெயை உருக்கிக் கொள்ளுங்கள்.
சிறிதளவு இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
பின், இதனுடன் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து வதக்கவும். அதைத் தொடர்ந்து சிறிதளவு மிளகாய் துாள், உப்பு, கொத்தமல்லி இலைகளை சேர்த்து, நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால், சுவையான, ஆரோக்கியமான பூண்டு பட்டர் பாஸ்தா ரெடி.
- நமது நிருபர் -