ADDED : ஆக 01, 2026 06:34 AM

- நமது நிருபர் -: உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் அல்வாவை எளிதில் செய்யலாம். இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதே சமயம் சுவை அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 7
நாட்டு சர்க்கரை -1 கப்
பேரீச்சம் பழம் -5
உலர் திராட்சை - 50 கிராம்
ஏலக்காய் துாள் - சிறிதளவு
செய்முறை
நெல்லிக்காய்களை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும். வெந்த நெல்லிக்காய் ஆறியதும், அதன் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, அரைத்த நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை உருகி நெல்லிக்காயுடன் சேரும் வரை நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாகும் போது ஏலக்காய் துாள் சேர்க்கவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான, சத்தான நெல்லிக்காய் அல்வா தயார்!
