sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ மாப்பிள்ளை சம்பா இட்லி!

 மாப்பிள்ளை சம்பா இட்லி!

 மாப்பிள்ளை சம்பா இட்லி!


ADDED : ஜூன் 06, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

கம்பு, கேழ்வரகு, தினை, சோளம் போன்ற சிறு தானியங்களால் செய்யப்படும் கூழ், சாப்பாடு போன்றவை, மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வந்தனர். உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். இதையே நம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி செய்து கொடுங்கள். உடலுக்கு ஆரோக்கியமானது.

தேவையான பொருட்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி --- 6 கப்

பச்சரிசி -- 2 கப்

உளுந்து -- 1 கப்

வெந்தயம் -- சிறிதளவு

செய்முறை :

வழக்கமாக செய்யும் இட்லிக்கு, மாவு அரைப்பது போல உளுந்து மற்றும் வெந்தயத்தை, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

மாப்பிள்ளை அரிசியை, பச்சரிசி இரண்டையும் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற்றி ஊற வைக்க வேண்டும். முதலில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் உளுந்தை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பின், ஊற வைத்துள்ள அரிசியை, கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். 5 மணி நேரத்திற்கு மேலாக ஊற வைத்தாலும், அரைப்பதற்கு நேரம் எடுக்கும். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு அரைப்பது நல்லது.

அரிசி மற்றும் உளுந்து மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு புளித்ததும் இட்லி பாத்திரத்தில் இட்லியை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆற்றல் நிறைந்த மாப்பிள்ளை சம்பா இட்லி தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us