தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜி

உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜி

உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜி


ADDED : ஜூலை 11, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலுக்கு ஆரோக்கியமான கற்பூரவல்லி பஜ்ஜியை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா. இந்த பஜ்ஜியை சாப்பிட்டால் சளி தொல்லை குணமாகும்.

செய்முறை


முதலில் கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் நன்கு கழுவவும். கழுவிய இலைகளின் காம்புகளை நீக்கி, ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

பின் மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் துாள், பெருங்காய துாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி போடும் மாவின் பதத்திற்கு பிசையவும். இந்த மாவு கலவையில் இலைகளை போட்டு வைத்து கொள்ளவும். இதையடுத்து, வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். சூடான பின், மாவில் கிடக்கும் கற்பூரவல்லி இலைகளை எண்ணெயில் போடவும்.

இவை, நன்கு பொரிந்தவுடன் அதை எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். அவ்வளவு தான் கற்பூரவல்லி பஜ்ஜி தயார்.

இதை சட்னி, சாம்பார் எதுவும் இல்லாமல் அப்படியே தொட்டு சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us