தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆரோக்கியத்தை தரும் ராகி, வேர்க்கடலை ரோல்

 ஆரோக்கியத்தை தரும் ராகி, வேர்க்கடலை ரோல்

 ஆரோக்கியத்தை தரும் ராகி, வேர்க்கடலை ரோல்


ADDED : ஆக 22, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

வேர்க்கடலை மற்றும் கேழ்வரகில், பல ஊட்டச்சத்துகள் உள்ளன. உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த இரண்டையும் பயன்படுத்தி, சுவையான தின்பண்டம் செய்யலாம். இது ஆந்திராவில், மிகவும் பிரபலம். செய்வதும் எளிது.

தேவையான பொருட்கள்: l கேழ்வரகு மாவு - 1 கப்

l வேர்க்கடலை - அரை கப்

l வெல்லம் - ஒன்றரை கப்

l தேங்காய் துறுவல் - 1 கப்

l வெள்ளை எள் - 1 டேபில் ஸ்பூ ன்

l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்

l நெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் அடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும் வெள்ளை எள்ளை போட்டு வறுக்கவும். அதன்பின் தேங்காய் துறுவல், வேர்க்கடலை, வெல்லம், ஏலக்காய் துாள் சேர்த்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் வென்னீர் சேர்த்து, மென்மையாக பிசைந்து கொள்ளவும். இதை சிறு, சிறு உருண்டைகளாக்கி, லேசாக தட்டி கொள்ளவும். இதில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து, ரோல் போல சுருட்டிக் கொள்ளவும். இந்த ரோல்களை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி, 15 நிமிடம் வேக வைத்தால், சூடான, சுவையான ராகி, வேர்க்கடலை ரோல் தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us