தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ சளி தொல்லை போக்கும் மூலிகை ரசம்

சளி தொல்லை போக்கும் மூலிகை ரசம்

சளி தொல்லை போக்கும் மூலிகை ரசம்


ADDED : அக் 04, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலநிலை மாற்றத்தால் பலருக்கும் சளி தொல்லை தருகிறது. வீட்டில் உள்ள அனைவரும் மூக்கை உறிஞ்சு கொண்டு இருப்பர். இவர்களின் சளி பிரச்னைக்கு தீர்வு காண, மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலே மருத்துவ குணமிக்க மூலிகை ரசம் வைத்து கொடுத்து சளி பிரச்னையை சரி செய்யலாம். இதை எப்படி செய்வது என்பது விவரிக்கப்பட்டு உள்ளது.

செய்முறை முதலில் அம்மியில் கற்பூரவள்ளி இலை, வெற்றிலை, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். துவையல் பதத்திற்கு வரும் வரை அரைக்க வேண்டும். பிறகு, அம்மியில் தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, அரைத்த எடுத்த இரண்டு கலவைகளையும் பெரிய அளவிலான பாத்திரத்தில் போட வேண்டும். இதில், இரண்டு தக்காளிகளை கையாலே பிசைய வேண்டும். பின், 3 டம்பளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ளவும்.

இதையடுத்து, வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் துாள், பெருங்காய துாள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதில், ஏற்கனவே தயார் செய்த மூலிகை சாறை ஊற்ற வேண்டும்.

ரசம் கொதிக்கும்போது ஒரு டீஸ்பூன் கல் உப்பு, எலுமிச்சை சாறு, இடித்த இஞ்சி ஆகியவை சேர்க்க வேண்டும். இதையடுத்து வாணலியில் மூடிபோட்டு மூட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான, மருத்துவ குணமிக்க மூலிகை ரசம் தயார். இதை சுடு சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும்

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us