ADDED : மே 09, 2026 02:13 AM

- நமது நிருபர் -: வீட்டிலே எளிய முறையில் பிஸ்கட் அல்வா செய்யலாம். இதை செய்வதற்கு அதிக நேரம் தேவையில்லை. சுவை பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பிஸ்கட்: 2 பாக்கெட்
பால்: 500 மி.லி.,
முந்திரி பருப்பு: 20 துண்டுகள்
நெய்: தேவையான அளவு
சர்க்கரை: தேவையான அளவு
எப்படி செய்வது?
முதலில் பாலில் தயாரிக்கப்பட்ட இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து கொள்ளவும். இதை மிக்சியில் போட்டு, இட்லி பொடி போல அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொள்ளவும். இதில், அரைத்து வைத்த பிஸ்கட் பொடியை போட்டு நன்கு கிளறவும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் பொடி கலந்த பாலை ஊற்றி, கரண்டியால் நன்கு, அடி பிடிக்காமல் கிளற வேண்டும். ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக கிளறவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, நெய் ஊற்றி மீண்டும் லேசாக கிளறவும்.
வறுத்த முந்திரி பருப்பை போட்டு லேசாக கிளறினால், சுவையான பிஸ்கட் அல்வா தயார். இந்த அல்வாவின் சுவை அனைவருக்கும் பிடிக்கும்!

