தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நோய் எதிர்ப்பு சக்தி தரும் புரோகோலி தோசை

 நோய் எதிர்ப்பு சக்தி தரும் புரோகோலி தோசை

 நோய் எதிர்ப்பு சக்தி தரும் புரோகோலி தோசை


ADDED : பிப் 21, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: புரோகோலியில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. விட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இது, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எடையை குறைக்க விரும்புவோருக்கு புரோகோலி பெஸ்ட் சாய்ஸ். இதை பயன்படுத்தி பல உணவுகளை தயாரிக்கலாம். அவற்றில் புரோகோலி தோசையும் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்

புரோகோலி துண்டுகள் - 2 கப்கள்

பாம்பே ரவை - 1 கப்

தயிர் - 1 கப்

பச்சை மிளகாய் - அரை கப்

இஞ்சி துறுவல் - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 5

சீரகம் - 1 ஸ்பூன்

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் புரோகோலியை சிறு, சிறு துண்டு களாக நறுக்கி, நீரில் கழுவி சிறிது நேரம் ஆவியில் வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதில் தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, 15 நிமிடம் மூடி வைக்கவும்.

அதன்பின், இந்த மாவில், மசித்த புரோகோலி, சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துறுவல், சுவைக்கு தேவையான அளவு உப்பு, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் தடவி சூடானதும் மாவை மெல்லியதாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us