தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ காயல்பட்டினம் மிளகு சிக்கன் காயல்பட்டினம் மிளகு சிக்கன்

காயல்பட்டினம் மிளகு சிக்கன் காயல்பட்டினம் மிளகு சிக்கன்

காயல்பட்டினம் மிளகு சிக்கன் காயல்பட்டினம் மிளகு சிக்கன்


ADDED : பிப் 28, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

சிக்கன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த வாரம் துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தின் மிளகு சிக்கன் செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பட்டை -- 2 துண்டு கிராம்பு -- 3 ஏலக்காய் -- 5

மிளகு -- ஒன்றரை டேபிள் ஸ்பூன் சீரகம் -- 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு -- 1 டேபிள் ஸ்பூன் மல்லி -- 1 டேபிள் ஸ்பூன்

சிக் கன் -- 1 கிலோ இஞ்சி - பூண்டு பேஸ்ட் -- 2 டேபிள் ஸ்பூன்

தயிர் -- 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் துாள் -- 1/2 டீஸ்பூன்

உப்பு -- சுவைக்கேற்ப பச்சை மிளகாய் -- 2.

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து, இறக்கி குளிர வைக்கவும். மிக்சியில் போட்டு, மென்மையாக பொடித்து தனியாக வைத்து கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் துாள், சுவைக்கு ஏற்ப உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.

அதன்பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு ஸ்பூன் மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். மீதமுள்ள அனைத்து பொடியையும் சேர்த்து நன்கு சிக்கனை பிரட்டி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து தாளிப்பதற்கான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு தட்டில் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தயிர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள அரைத்த பவுடரை சேர்த்து கிளறி, ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, சிக்கனை 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

அதற்குள் மிக்சியில் ஊற வைத்த பாதாம், முந்திரியை சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

10 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, சிக்கன் வெந்ததும், அரைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி விழுதை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, மீண்டும் அரை மணி நேரம் கொதிக்க வைத்தால், சுவையான காயல்பட்டினம் மிளகு சிக்கன் தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us