sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 கேரளா ஸ்டைல் ஆப்பிள் மோர் குழம்பு

/

 கேரளா ஸ்டைல் ஆப்பிள் மோர் குழம்பு

 கேரளா ஸ்டைல் ஆப்பிள் மோர் குழம்பு

 கேரளா ஸ்டைல் ஆப்பிள் மோர் குழம்பு


ADDED : மார் 14, 2026 06:39 AM

Google News

ADDED : மார் 14, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: கேரளாவில் பிரபலமான உணவு வகைகளில் ஆப்பிள் மோர் குழம்பும் ஒன்று. இதை செய்வது மிகவும் சுலபமானது. இந்த வாரம் செய்து பார்க்கலாம்.

செய்முறை  ஆப்பிளின் தோலை சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கவும்

 அடுப்பை சிறு தீயில் வைத்து, வாணலியில் நறுக்கிய ஆப்பிள், உப்பு, மஞ்சள் துாள், தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும்

 சிறிய மிக்சி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் துாள், சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்

 தயிரை பவுலில் எடுத்து, நன்கு ஸ்பூனால் உடைத்து கொள்ள வேண்டும்

 வெந்த ஆப்பிளுடன் அரைத்த விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்

 பின் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்

 அடுப்பை சிறு தீயில் வைத்து, வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலையை தாளிக்கவும். பின், இதனுடன் தாளித்ததை சேர்க்கவும்

 பின் பவுலுக்கு மாற்றி, மேலே காய்ச்சாத தேங்காய் எண்ணெய் விடவும். இப்போது சுவையான, சுலபமான வித்தியாசமான ஆப்பிள் மோர் குழம்பு தயார்.

தேவையான பொருட்கள்: * ஆப்பிள் - 3 சிறியது * தேங்காய் துண்டுகள் - அரை கப் * புளிப்பில்லாத தயிர் - கால் கப் * மஞ்சள் துாள் - ஒன்றரை டீஸ்பூன் * உப்பு - ருசிக்கு ஏற்ப * பூண்டு - ஒரு பல் * சீரகம் - ஒரு ஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 * தாளிக்க கடுகு - 1 ஸ்பூன் * வெந்தயம் - 1 டீஸ்பூன் * கறிவேப்பிலை - 1 ஆர்க்கு * தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் * தண்ணீர் - தேவையான அளவு








      Dinamalar
      Follow us