sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி

/

கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி

கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி

கேரளா ஸ்டைல் பலாப்பழ எரிசேரி


ADDED : மே 02, 2025 09:01 PM

Google News

ADDED : மே 02, 2025 09:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பலாப்பழ எரிசேரி அல்லது சக்க எரிசேரி என்பது கேரளாவில் பலாப்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் 'சைடு டிஷ்' ஆகும். பல முக்கிய நிகழ்வுகளில் இதை சமைக்கின்றனர்.

செய்முறை


 பலாப்பழத்தை காய்கறி வெட்டுவது போல் வெட்டவும். பலாப்பழ கொட்டைகளை எடுத்து வெயிலில் காய வையுங்கள். சாம்பாருக்கு பயன்படுத்தலாம்.

 வெட்டிய பலாப்பழத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் துாள், தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 8 முதல் -10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

 நான்கு பச்சை மிளகாய், அரை மூடி துருவிய தேங்காய், கொஞ்சம் கறிவேப்பிலை, ஐந்து பல் பூண்டை அம்மிக்கல்லில் போட்டு அரைத்து கொள்ளவும். மிக்சி பயன்படுத்தாமல் மசாலா தயாரிக்க முயற்சிக்கவும்.

 பலாப்பழம் வெந்துவிட்டதா என்பதை பார்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும்.

 தண்ணீர் 100 மி.லி., தண்ணீர் சேர்த்து, அனைத்தையும் நன்றாக கலக்கவும். மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

 ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து கொள்ளுங்கள்.

 கடுகு வெடித்தவுடன், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். இத்துடன் நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.

 அடுப்பை அணைத்து விட்டு, கால் மூடி தேங்காய் துருவல் சேர்க்கவும். இந்த சூட்டிலேயே தேங்காய் வறுபட்டுவிடும்.

 இதை பலாப்பழத்துடன் கலந்துவிட்டால் சுவையான பலாப்பழ எரிசேரி ரெடி.

சிலர் பலாப்பழ கொட்டையை பயன்படுத்தி எரிசேரி செய்கின்றனர். வெள்ளை காராமணியை வேகவைத்து எரிசேரியில் சேர்க்கின்றனர்.

நீங்களும் காராமணி சேர்க்க நினைத்தால் மசாலா போடும் முன் சேர்க்கலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us