ADDED : மே 16, 2026 03:28 AM

- நமது நிருபர் -: குழந்தைகளுக்கு வீட்டில் நொறுக்கு தீனிகள் இல்லை என்றால், கடைகளில் ஏதாவது வாங்கி தரும்படி அடம் பிடிப்பர். அத்தகைய குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த புதினா சாமை வடை செய்து தரலாம்.
தேவையான பொருட்கள்
சாமை அரிசி மாவு - 2 கப்
பச்சரிசி மாவு - 2 கப்
பொரிகடலை - அரை கப்
பாசிப்பருப்பு - அரை கப்
புதினா - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் வத்தல் - 6
சீரகம் - சிறிதளவு
பூண்டு - 2
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - போதுமான அளவு
செய்முறை:
சாமை அரிசி மற்றும் பச்சரிசியை முதலில் தனியாக வறுத்து கொள்ள வேண்டும். இவற்றுடன் சிறிதளவு பொரி கடலை சேர்த்து அரைக்க வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் சீரகம், பூண்டு, பெருங்காயம் போன்றவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.
புதினா இலைகளை தனியாக அரைத்து, வடிகட்டி கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பிழியும் பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள சீரக விழுது, புதினா சாறை சேர்த்து மாவு பிசைந்து கொள்ளுங்கள்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வடை போல தட்டி போடவும். இரண்டு புறமும் நன்கு வெந்தால் புதினா சாமை வடை தயார்!
