தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ காலை அல்லது மாலை நேர 'மோர் களி' உணவு

காலை அல்லது மாலை நேர 'மோர் களி' உணவு

காலை அல்லது மாலை நேர 'மோர் களி' உணவு


ADDED : ஆக 02, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2025 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய தலைமுறையினர் ருசிக்க தவிர்க்கும் உணவுகளில் ஒன்று 'மோர் களி'. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மோர் களியும் ஒன்று. உப்புமா போன்று இருந்தாலும், மோர் களிக்கு மோர் மிளகாய், தயிர், அரிசி மாவு பயன்படுத்தி மோர் களி செய்யலாம்.

செய்முறை  ஒரு பாத்திரத்தில் 200 கிராம் அரிசி மாவு, 200 மில்லி தயிர், அரிசி மாவு அளந்த கப் அளவில் இரண்டரை மடங்கு தண்ணீர் ஊற்றி, நன்றாக கலக்கவும்.

 பெரிய கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் பத்து மோர் மிளகாய் பாதியாக உடைத்து போட்டு வறுக்கவும்.

 இத்துடன், ஒரு டீஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் பெருங்காயம் போட்டு வறு.

 இதன் பின், அரிசி மாவு, தயிர், தண்ணீர் கலவையை ஊற்றி கிண்டவும். மிதமான சூட்டில் 5 - 6 நிமிடங்கள் கிண்ட வேண்டும்.

 ஆரம்பத்தில் சொன்னது போல், இது உப்புமா செய்முறை போல தான். தண்ணீர் வற்றி, மோர் களி தயாராகும்.

 களி ஓரளவு கெட்டியானதும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிண்ட வேண்டும்.

 மோர் களி கெட்டியான பிறகு, அடுப்பை ஆப் செய்து, ஒரு சதுர வடிவிலான பாத்திரத்தில் மாற்றி, அரை மணி நேரம் ஆறவிடவும்.

 சிலர் அப்படியே கூட சாப்பிட விரும்புவர். அவர்கள் ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம் அல்லது இரண்டாவது செய்முறையை தொடரலாம்.

 ஆறவிட்ட மோர் களி கேக் போன்று மாறிவிடும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

 வாணலியில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி, அது சூடானதும் பனீர் ரோஸ்ட் செய்வது போன்று, மோர் களி துண்டுகள் போட்டு வறுத்து எடுத்தால் ரெடியாகிவிடும்

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us