ADDED : மார் 28, 2026 04:14 AM

- நமது நிருபர் -:
பிறக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பாலை தவிர, வேறு எதுவும் தரக்கூடாது. எந்தளவுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறோமோ, அந்தளவுக்கு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆறு மாதத்துக்கு பின், நிச்சயமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமானதாக இருக்காது. அப்போது வீடுகளில் கேழ்வரகு கஞ்சி, சத்து மாவு உருண்டை செய்து கொடுப்பர். கடைகளில் இருந்து செரலாக் வாங்கி கொடுப்பர். சில குழந்தைகளுக்கு இது ஒத்துக்கொள்ளாது. இதற்காகவே வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற செரலாக் செய்யலாம்.
செய்முறை
தேவையான பொருட்களை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் போதும், சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த, வீட்டில் தயார் செய்யும் செரலாக் ரெடியாகி விட்டது.
இதை தினமும் காலையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சிறிதளவு தண்ணீருடன் செரலாக் சேர்த்து கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். கொஞ்சம் கட்டியானதும் இறக்கிவிடவும்.
சூடு ஆறியவுடன் குழந்தைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடலாம். குழந்தைகள் தங்களது உடல் வளர்ச்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்துகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

