sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி

 ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி

 ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி


ADDED : மார் 28, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அலுவலகத்துக்கு செல்வோருக்கு மதிய உணவு என்ன செய்து தருவது என்று யோசித்து கொண்டிருந்தால், இம்முறை, ஊட்டச்சத்துகள் நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்

 பச்சை பயறு - 2 கப்

 மிளகாய் - 2

 சீரகம் - 2 டீஸ்பூன்

 கோதுமை மாவு - 2கப்

 உப்பு - சுவைக்கு ஏற்ப

 தண்ணீர் - போதுமான அளவு

செய்முறை

 முதலில் பச்சை பயறில் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.

 ஊற வைத்த பச்சை பயறு, இரண்டு மிளகாய், 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். நைஸாக அரைத்த பின், ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.

 பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சை பயறு கலவையை ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

 சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து எடுக்கவும்.

இறுதியாக தோசை கல்லை சூடேற்றி, தேய்த்து வைத்த மாவை சுட்டெடுத்தால் போதும். சுவையான, ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு சப்பாத்தி ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us