தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆம்லெட் மிளகு குழம்பு

 ஆம்லெட் மிளகு குழம்பு

 ஆம்லெட் மிளகு குழம்பு


ADDED : மார் 28, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

முட்டையை தினமும் உணவில் எடுத்து கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை வைத்து ஆம்லேட், ஆப்பாயில், குழம்பு வைக்கலாம். ஒரே விதமாக குழம்பு வைத்து போர் அடித்து விட்டது என்று நினைத்தால், காரசாரமாக ஆம்லெட் மிளகு குழம்பு வைக்கலாமே...!

தேவையான பொருட்கள்

 ஐந்து முட்டை

 அரை டீஸ்பூன் கடுகு

 அரை டீஸ்பூன் சீரகம்

 ஒரு கொத்து கறிவேப்பிலை

 அரை கப் சின்ன வெங்காயம்

 இரண்டு காய்ந்த மிளகாய்

 ஒரு டீஸ்பூன் மிளகாய் துாள்

 அரை டீஸ்பூன் கரம் மசாலா துாள்

 உப்பு, கொத்துமல்லி தேவையான அளவு

 ஒரு டீஸ்பூன் மல்லி

 மூன்று டீஸ்பூன் மிளகு

 பட்டை, கிராம்பு ஒன்று

 ஒரு துண்டு இஞ்சி

 ஐந்து பல் பூண்டு

 ஒரு பெரிய வெங்காயம்

 இரண்டு தக்காளி

 அரை டீஸ்பூன் மஞ்சள் துாள்

 அரை டீஸ்பூன் மிளகாய் துாள்

 அரை டீஸ்பூன் குழம்பு மிளகாய் துாள்

 கால் கப் தேங்காய் துருவல்

செய்முறை

அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, மல்லி, சீரகம், மிளகு, கிராம்பு, பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.

ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

பின், வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெங்காயம் சேர்த்து நன்கு வைக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்து உள்ள மசாலாவை சேர்த்து, மஞ்சள், மிளகாய், கரம் மசாலா துாள்கள், உப்பு, காய்ந்த மிளகாய் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், ஆம்லெட் போட்டு ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி இலை துாவி இறக்கவும். சுவையான ஆம்லேட் மிளகு குழம்பு தயார்.

தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம், பருப்பு சாதம் ஆகியவற்றுக்கு சைடு டிஷ் ஆக சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us