
செய்முறை: ஒரு தடிமனான பனீர் துண்டை அரை அங்குல தடிமனில் இரண்டு துண்டுகளாக வெட்டவும். துருவிய சீஸ், ஆப்ரிகாட், பச்சை மிளகாய் கொத்தமல்லி சட்னி மற்றும் நறுக்கிய முந்திரி ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
ஒரு பனீர் துண்டின் மீது ஒரு கரண்டி கலவையை வைத்து, அதன் மேல் மற்றொரு துண்டை வைக்கவும். மீதமுள்ள பனீர் துண்டுகளுக்கும் இதேபோல் செய்யவும். சோள மாவுக் கலவையில் முக்கி எடுக்கவும்.
நடுவில் வைத்துத் தயாரிக்கப்பட்ட பனீரை இருபுறமும் கவனமாக வறுக்கவும். செய்து முடித்ததும், அதை உறிஞ்சும் காகிதத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் சூடாக்கி, வெங்காயத்தை ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். முந்திரி, நறுக்கிய தக்காளி மற்றும் கசூரி மேத்தி சேர்த்து மேலும் மூன்று முதல் நான்கு நிமிடங்கள் ஒன்றாக வதக்கவும்.
அடுத்து அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் சுமார் பத்து நிமிடங்கள் வேக விடவும். அதை ஆற வைத்து, மென்மையான விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
அதை வதக்கிய பிறகு, அரைத்த விழுதுடன் சிவப்பு மிளகாய் துாள், மஞ்சள் துாள் மற்றும் உப்பு சேர்க்கவும். கடாயின் ஓரத்தில் எண்ணெய் பிரியும் வரை அனைத்தையும் ஒன்றாக சமைக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பனீர் பசாந்தாவை குழம்பின் மீது மெதுவாக ஊற்றி, அது ஒரு கொதி நிலைக்கு வரும் வரை காத்திருக்கவும். அதன் மேல் கிரீம் தடவி, பராத்தா அல்லது நான் உடன் பசாந்தாவைப் பரிமாறவும்.

