ADDED : ஜூலை 18, 2026 12:07 AM

- நமது நிருபர் -
காலையில் பள்ளிக்கு செல்லும் குட்டீஸ்களுக்கு, சிற்றுண்டி தயாரிப்பதே வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும்பாடு. நேரமும் இருக்காது. தயாரிக்கும் சிற்றுண்டி ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும். உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்து பாருங்கள். 25 நிமிடத்தில் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
l முட்டை - 2
l உருளைக்கிழங்கு - 1 சிறியது
l குடமிளகாய் - 1
l மிளகு துாள் - 1 சிட்டிகை
l உப்பு - தேவையான அளவு
l சமையல் எண்ணெய் - ஒரு பெரிய ஸ்பூன்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கு மற்றும் குடமிளகாயை, நன்றாக கழுவி சிறிதாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் உருளைக்கிழங்கு, குடமிளகாய் துண்டுகளை போட்டு மென்மையாகும் வரை நன்கு வதக்கவும். அதன் பின், இதன் மீது முட்டை கலவையை, பரவலாக சமமாக ஊற்றவும். மிதமான தீயில் வைக்கவும்.
ஒரு பக்கம் வெந்த பின், மற்றொரு பக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தால், உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார். தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம். காலை சிற்றுண்டிக்கு ஏற்றது. எளிதாக செய்யலாம். அதிக நேரம் தேவைப்படாது.
