மூட்டு வலி பறந்து போக முடவாட்டுக்கால் கிழங்கு சூப்
மூட்டு வலி பறந்து போக முடவாட்டுக்கால் கிழங்கு சூப்
ADDED : ஆக 09, 2025 05:05 AM

மூட்டு வலி உட்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுவோர் முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடித்தால், வலி பறந்து போகும். இதனை 'வெஜ்' ஆட்டுக்கால் சூப் என்றும் அழைக்கின்றனர்.
செய்முறை முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி, மேல் தோலில் இருக்கும் ரோமங்களை நீக்கி சுத்தம் செய்யவும். பின் சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும். முடவாட்டுக்கால் துண்டுகளாக சாப்பிட பிடிக்காதவர்கள், தோலை நீக்கி நன்றாக அரைத்தும் பயன்படுத்தலாம்.
இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு லவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பின், சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 20 நிமிடம் வரை கொதிக்க வேண்டும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்துாள் துாவி குடிக்கவும்.
தொடர்ந்து 10 மு தல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால், முடக்குவாதம், மூட்டு வலி கட்டுப்படுவதை உ ணரலாம்
. - நமது நிருபர் -