ADDED : அக் 11, 2025 04:56 AM

ராகியை உணவில் சேர்த்துக் கொள்வதால் மூலம் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. செரிமான பிரச்னையை மேம்படுத்தவும், உடலுக்கு தேவையான சக்தியை வழங்கவும் செய்கிறது.
இதுபோல முருங்கை கீரையை உணவில் எடுத்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
வைட்டமின் ஏ, சி, இரும்பு சத்தும் உள்ளது. ராகி, முருங்கை கீரை காம்பினேஷனில் சூப்பரான கொழுக்கட்டை செய்யலாம்.
செய்முறை அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து, மிதமான சூட்டில் தீ வைத்து, ராகி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு, கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
முருங்கை கீரை சேர்த்து நன்றாக வதங்கியதும், கொத்தமல்லி இலை துாவி விடவும். பின், அடுப்பை ஆப் செய்து, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கொழுக்கட்டை போன்று உருண்டையாக பதத்தில் தேய்த்து, இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி முருங்கை கீரை கொழுக்கட்டை தயார். கார சட்டினி வைத்து சாப்பிட்டால் சூப்பர் காம்பிஷேனாக இருக்கும். முருங்கை கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, புதிய டிஷ் ஆக இருக்கும்.
- நமது நிருபர் -