தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ குட்டீஸ்களுக்கு பிடித்த ரசமலாய்

 குட்டீஸ்களுக்கு பிடித்த ரசமலாய்

 குட்டீஸ்களுக்கு பிடித்த ரசமலாய்


ADDED : பிப் 28, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

பிரட் பயன்படுத்தி, விதவிதமான இனிப்புகள் தயாரிக்கலாம். பர்பி, ஹல்வா என, பல்வேறு இனிப்பு தின்பண்டங்களை தயாரிப்பர். பிரட் ஸ்லைஸ்களை வைத்து, குட்டீஸ்களுக்கு பிடித்தமான ரசமலாய் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பிரட் - 4 ஸ்லைஸ்கள் துருவிய பன்னீர் - அரை கப்

பால் பவுடர் - அரை கப் பொடித்த சர்க்கரை - 8 ஸ்பூன்

காய்ச்சி ஆறிய பால் - அரை கப் எல்லோ புட் கலர் - ஒரு சிட்டிகை பிரஷ் கிரீம் - 2 ஸ்பூன் ட்ரை ப்ரூட்ஸ் - 2 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் பிரட் ஸ்லைஸ்களை எடுத்து, அவற்றின் ஓரங்களை வெட்டவும். பின், சிறு, சிறு துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பன்னீர், பால் பொடி, சர்க்கரை பொடியை சேர்த்து சப்பாத்தி மாவு போன்று நன்றாக பிசையவும். இதை சிறு, சிறு உருண்டைகள் பிடிக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரை கப் பால், பால் பொடி, பொடித்த சர்க்கரை, எல்லோ புட் கலர் சேர்த்து கலக்கவும். இதில் இரண்டு ஸ்பூன் பிரஷ் கிரீம் சேர்க்கவும். அகலமான பாத்திரத்தில் ஏற்கனவே தயாரித்துள்ள பன்னீர், பிரட் உருண்டைகளை வைக்கவும். இவற்றின் மீது பால், பொடித்த சர்க்கரை கலவையை ஊற்றவும். இதன் மீது ட்ரை புரூட்களை துாவி அலங்கரித்து, இரண்டு மணி நேரம் மூடி வைத்தால், சூப்பரான பிரட் ரசமலாய் தயார்.

இ ரண்டு மணி நேரத்துக்கு பின் பரிமாறலாம். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளி விட்டு வரும் போது, சாப்பிட ஏதாவது தரும்படி நச்சரிப்பர். கடைகளில் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து, அவர்களின் வயிற்றை கெடுப்பதை வி ட, வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி, சுவையான, சுகாதாரமா ன தின்பண்டங்களை செய்து கொடுப்பது நல்லது. பிரட் ரசமலாய் வாயில் போட்டவுடன் கரையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us