தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் 'மசாலா தேங்காய் சாதம்'

மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் 'மசாலா தேங்காய் சாதம்'

மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் 'மசாலா தேங்காய் சாதம்'


ADDED : ஆக 30, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு தினமும் இட்லி, தோசை, தயிர் சாதம், புளிசாதம், லெமன் சாதம் என்று கொடுப்பதற்கு பதிலாக, ஒருமுறை 'மசாலா தேங்காய் சாதம்' கொடுங்கள், குழந்தைகள் மீண்டும் மீண்டும் அந்த சாதத்தை கேட்டு அடம் பிடிப்பர்.

செய்முறை  முதலில் தேங்காய், மஞ்சள் துாள், மிளகாய் வத்தல், சிறிதளவு கடுகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

 பின் ஒரு பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். சிறிதளவு கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். வாசத்திற்கு சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

 5 நிமிடங்களுக்கு பின், இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, பச்சை வாசனை போகும் வரை 3 முதல் 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

 தற்போது மசாலா தேங்காய் சாதம் செய்வதற்கான கலவை ரெடி. இறுதியாக வேக வைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். ஏற்கனவே உப்பு சேர்த்து சாதம் செய்திருப்பதால், தேவைப்படும் பட்சத்தில் மேலும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

 இறுதியாக கொத்தமல்லி இலைகளை லேசாக துாவினால் போதும். சுவையான மசாலா தேங்காய் சாதம் ரெடி. இதற்கு துவையல், ஆம்லேட், தயிர் வெங்காயம் போன்றவற்றை வைத்து பரிமாறலாம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us