sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 'ஸ்ட்ரீட் புட் ஸ்பெஷல்' சில்லி சிக்கன் பிராங்கி

/

 'ஸ்ட்ரீட் புட் ஸ்பெஷல்' சில்லி சிக்கன் பிராங்கி

 'ஸ்ட்ரீட் புட் ஸ்பெஷல்' சில்லி சிக்கன் பிராங்கி

 'ஸ்ட்ரீட் புட் ஸ்பெஷல்' சில்லி சிக்கன் பிராங்கி


ADDED : மார் 14, 2026 06:39 AM

Google News

ADDED : மார் 14, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அலுவலகத்திற்கு அவசர, அவசரமாக கிளம்புவோர் நேரம் இல்லாததால், சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

இவர்கள் தங்கள் பயணத்தின் போது கடித்து சாப்பிடும் வகையில், சப்பாத்தியில் நிறைய ரோல்களை செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

சப்பாத்திக்குள் வைத்து சாப்பிடும், 'ஸ்ட்ரீட் புட்' ஸ்பெஷலான சில்லி சிக்கன் பிராங்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஐந்து பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். எட்டு பல் பூண்டு, தோல் சீவிய இஞ்சி ஒரு துண்டு, அரை வெங்காயம் நறுக்கி எடுக்கவும்.

இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து விழுது எடுத்து கொள்ள வேண்டும். இப்போது சில்லி சிக்கன் பிராங்கி செய்வது எப்படி என பார்க்கலாம்.

செய்முறை சிக்கனை நன்கு கழுவி நீள வாக்கில் நறுக்கி, பெரிய பவுலில் போடவும். அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, அரைத்த மசாலா விழுது, தயிர், மஞ்சள், காஷ்மீரி மிளகாய் துாள்கள், உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கவும்.

பின், அடுப்பை ஆன் செய்து கடாய் வைக்கவும். குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிக்சிங் செய்த சிக்கனை நன்கு வேக வைக்கவும்.

இதற்கிடையில் மயோனிஸ், செஷ்வான் பேஸ்ட்டை சிறிய பவுலில் போட்டு இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். சிக்கன் நன்கு வெந்ததும், அடுப்பை ஆப் செய்து விடவும்.

சப்பாத்தியை எடுத்து அதன் மீது புதினா சட்னி தடவி, நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், கேரட், மயோனிஸ், செஷ்வான் பேஸ்ட் மிக்சிங், நன்கு வெந்த சிக்கன் துண்டுகளை வைத்து, சப்பாத்தியை மடித்தால் சூப்பரான சில்லி சிக்கன் பிராங்கி ரெடி.

பெரும்பாலும் சில்லி சிக்கன் பிராங்கி சாலையோர கடைகளில் அதிகம் விற்கப்படும். சூப்பரான சுவையில் உங்கள் வீட்டிலும் செய்து சாப்பிடலாமே.

தேவையான பொருட்கள் * எலும்பு இல்லாத சிக்கன் 300 கிராம் * அரை எலுமிச்சை பழம் * அரைத்த மசாலா விழுது ஒரு டீஸ்பூன் * கெட்டி தயிர் ஒரு கப் * மஞ்சள் துாள் கால் டீஸ்பூன் * காஷ்மீரி மிளகாய் துாள் அரை டீஸ்பூன் * தனியா துாள் அரை டீஸ்பூன் * சீரக துாள் கால் டீஸ்பூன் * கரம் மசாலா அரை டீஸ்பூன் * சாட் மசாலா அரை டீஸ்பூன் * உப்பு அரை டீஸ்பூன் * சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலை * எண்ணெய் தேவையான அளவு








      Dinamalar
      Follow us