தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்...

நொறுக்குகள்...

நொறுக்குகள்...


ADDED : டிச 06, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

l இட்லிக்கு மாவு அரைக்கும் போது, ஒரு கைப்பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மெதுவாக இருக்கும்.

l சிக்கன் குழம்பு செய்யும் போது, இறுதியாக தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து குழம்பில் ஊற்றினால், குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

l சின்ன வெங்காயத்தை சுடுதண்ணீரில் போட்டு வைத்த பின், அவற்றின் தோல்களை எளிதாக உரிக்கலாம்

l கீரை சமைக்கும் போது, மண் பாத்திரத்தில் சமையல் செய்வது உடலுக்கு நல்லது.

l அப்பளம் நமத்து போனால், அதை சிறு துண்டுகளாக வெட்டி வாணலியில் போட்டு இரண்டு நிமிடம் வதக்கினால் அப்பளம் மீண்டும் மொறு, மொறுவென மாறி விடும்

l முட்டையை வேக வைத்த பின், அவற்றை குளிர்ந்த நீரில் போட்டால் மஞ்சள் கரு நிறம் மாறாமல் இருக்கும்.

l தோசையின் மீது கறிவேப்பிலை பொடியை போட்டு தோசை சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

l பருப்பு வேகவைக்கும் போது, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேகவைத்தால் பருப்பு மணமாக இருக்கும்.

l வாழைத்தண்டு பொரியல் செய்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், குடல் பகுதிக்கு நல்லது.

l தக்காளி சாதம் செய்யும் போது, எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us